×

வடகிழக்கு பருவமழை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க நாளை கிராம சபை கூட்டத்தை நடத்த தமிழக அரசு உத்தரவு

சென்னை: வடகிழக்கு பருவமழை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க நாளை கிராம சபை கூட்டத்தை நடத்த தமிழக அரசு உத்தரவு அளித்துள்ளது. தமிழ்நாட்டில் ஜனவரி 26 குடியரசு தினம், மார்ச் 22 உலக தண்ணீர் தினம், மே 1 தொழிலாளர்கள் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, நவம்பர் 1 உள்ளாட்சி தினம் ஆகிய 6 நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் 31 ம் தேதி தீபாவளி விடுமுறை வந்ததால் அதன் தொடர்ச்சியாக நவம்பர் 1 ம் தேதியை தமிழ்நாடு அரசு விடுமுறை நாளாக அறிவித்தது. இதன் காரணமாக உள்ளாட்சி தினமான நவம்பர் 1ம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டது.

இப்போது, அதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ளார். அதன்படி நவம்பர் 23ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.கிராம சபை கூட்டத்தில் பஞ்சாயத்தில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுய உதவிக்குழுக்களை கவுரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், தூய்மை பாரத இயக்கத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம், ஜல் ஜீவன் திட்டம், தீன்தயாள் கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

The post வடகிழக்கு பருவமழை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க நாளை கிராம சபை கூட்டத்தை நடத்த தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Gram Sabha ,Northeast ,Chennai ,Tamil Nadu ,Republic Day ,World Water Day ,Workers' Day ,
× RELATED அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி...