×

ஊட்டி தாவரவியல் பூங்காவில் கடிகார வடிவ அலங்காரம்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தாவரங்களை கொண்டு அமைக்கப்பட்ட கடிகார வடிவிலான அலங்காரம் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. ஊட்டியில் இரண்டாம் சீசன் முடிந்த நிலையில் தற்போது பூங்காவில் உள்ள மலர் செடிகளில் விதைகள் சேகரிக்கும் பணிகள் நடந்து வருவதால் பெரும்பாலான செடிகளில் மலர்கள் இன்றி காணப்படுகிறது. அதேபோல் மாடங்களில் வைக்கப்பட்டிருந்த மலர் அலங்காரம் அகற்றப்பட்டு விட்டது.

இந்நிலையில், தாவரவியல் பூங்காவில் தாவரங்களைக் கொண்டு கடிகார வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலங்காரம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த கடிகார அலங்காரத்தின் முன் நின்று புகைப்படங்களை எடுத்துச் செல்கின்றனர். ஆண்டு முழுவதும் இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க வாய்ப்புள்ளது.

The post ஊட்டி தாவரவியல் பூங்காவில் கடிகார வடிவ அலங்காரம்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு appeared first on Dinakaran.

Tags : Ooty Botanical Garden ,Ooty ,Ooty Government Botanical Garden ,
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்காவில்...