×

பந்தலூர் அருகே பள்ளி மைதானத்தில் காட்டு யானை புகுந்ததால் பரபரப்பு: கால்பந்து வீரர்கள் அலறி அடித்து ஓட்டம்

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நெலாக்கோட்டை பஜார் மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை ஒன்று தொடர்ந்து நடமாடி வருகிறது. இந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால், அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெலாக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் வீரர்கள் கால்பந்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, காட்டு யானை மைதானத்திற்குள் புகுந்து விளையாட்டு வீரர்களை துரத்தியதால், அலறியடித்து கொண்டு கால்பந்து வீரர்கள் தப்பியோடி ஓடினர்.

இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதனால், அப்பகுதியினர் பீதியும் அச்சமும் அடைந்துள்ளனர். இதையடுத்து காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள், வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பந்தலூர் அருகே பள்ளி மைதானத்தில் காட்டு யானை புகுந்ததால் பரபரப்பு: கால்பந்து வீரர்கள் அலறி அடித்து ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Pandalur ,Nelakottai Bazaar ,Nilgiris ,Dinakaran ,
× RELATED புல்லட் யானையிடம் இருந்து தப்பிக்க...