×

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் மழை நீர் தேங்கி கிடக்கும் பகுதிகள்

திருத்துறைப்பூண்டி, நவ. 22: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 நாள்களாக கனமழை பெய்தது வருகிறது. இதன் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. நகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதி அடைந்தனர். தற்போது உடனுக்கு உடன் மழை நீரை அப்புறப்படுத்தப்படும் பணி நடந்து வருகிறது. மேலும் 11, 12,16 வார்டுகளில் மழை நீர் தேங்கிய பகுதிகளை எம்எல்ஏ மாரிமுத்து, நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன், ஆணையர் துர்கா, பொறியாளர் வசந்தன்,சுகாதார ஆய்வாளர் மாரிச்சாமி பார்வையிட்டனர். மழை நீரை அப்புறப்படுத்தும் பணியை துரிதப்படுத்தினர். வார்டுகளில் மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்ப்படும் முன்பு நகராட்சி தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள், வார்டு கவுன்சிலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post திருத்துறைப்பூண்டி நகராட்சியில் மழை நீர் தேங்கி கிடக்கும் பகுதிகள் appeared first on Dinakaran.

Tags : Tiruthurapundi Municipality ,Thirutharapoondi ,Thiruthurapoondi ,Tiruvarur district ,Thiruthurapundi Municipality ,
× RELATED போதை பொருட்கள் எதுவும்...