×

விளம்பர பதாகை விழுந்த சிசிடிவி கசிவு சிறப்பு எஸ்ஐ உள்பட 3 போலீசார் மாற்றம்

கடலூர்: கடலூர் புதுக்குப்பத்தை சேர்ந்தவர் தணிகை ராஜன் (44). கீரப்பாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் பேராசிரியராக உள்ளார். இவர் நேற்றுமுன்தினம் மாலை பைக்கில் கடலூர் அண்ணா மேம்பாலம் சிக்னல் அருகே சென்றபோது, சாலையோரத்தில் வைக்கப்பட்ட விளம்பர பதாகை விழுந்ததில் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்த சிசிடிவி காட்சிகள் வைரலானது. இதை வெளியிட்டதாக திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் சிறப்பு எஸ்ஐ சிவசங்கர் மற்றும் போலீசார் குமரகுரு, சின்ராசு ஆகிய 3 பேரைஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கடலூர் எஸ்பி ராஜாராம் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post விளம்பர பதாகை விழுந்த சிசிடிவி கசிவு சிறப்பு எஸ்ஐ உள்பட 3 போலீசார் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Tanigai Rajan ,Pudukuppa, Cuddalore ,Keerapalayam ,Cuddalore Anna Membridge ,Dinakaran ,
× RELATED கடலூரில் குப்பைகளை சரியாக அகற்றாத ஒப்பந்த நிறுவனத்திற்கு அபராதம்