×

பள்ளிக்கு தாமதமாக வந்ததால் மாணவிகளின் தலைமுடியை வெட்டிய விடுதி வார்டன் சஸ்பெண்ட்


திருமலை: பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவிகளின் தலைமுடியை வெட்டிய விடுதி வார்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கஸ்தூரிபாகாந்தி பெண்கள் வித்யாலயா என்ற பெண்களுக்கான உண்டு உறைவிட அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களில் சிலர் அரசு விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் 15 பேர் பள்ளிக்கு சற்று தாமதமாக வந்தனர். அவர்களிடம் விடுதி வார்டன் பிரசன்னாகுமாரி விசாரணை நடத்தினார். மேலும் அவர்களுக்கு தண்டனையாக 2 மணி நேரம் வெளியில் நிற்க வைத்தார். பின்னர் 15 பேரின் தலைமுடியை வெட்டியுள்ளார். இந்த சம்பவத்தை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார்.

இதையறிந்து அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர்கள், கல்வித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். அதில் மாணவிகளின் தலைமுடியை வெட்டிய வார்டனை உடனே பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது போலீசில் புகார் கொடுத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள், மாணவிகள் மற்றும் வார்டன் பிரசன்னாகுமாரி ஆகியோரிடம் நேற்று தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து விடுதி வார்டன் பிரசன்னகுமாரியை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

The post பள்ளிக்கு தாமதமாக வந்ததால் மாணவிகளின் தலைமுடியை வெட்டிய விடுதி வார்டன் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Kasthuri Bagandi Girls Vidyalaya ,Visakhapatnam, Andhra Pradesh ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச்...