×

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க முகாம்

 

ஆர்.எஸ்.மங்கலம்,நவ.20: ஆர்.எஸ்.மங்கலத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பலசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. முகாமிற்கு மனநல மருத்துவர் இளவரசி, குழந்தைகள் நல மருத்துவர் சண்முக பிரியா, எலும்பு முறிவு மருத்துவர் பார்த்திபன், காது, மூக்கு மற்றும் தொண்டை, சிறப்பு மருத்துவர் கோமாசுந்தர் ஆகியோர்கள் முன்னிலை வகித்து மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த 126 நபர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்து முகாமில் கலந்து கொண்டனர். இவர்களில் 88 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர், மருத்துவ துறையினர் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க முகாம் appeared first on Dinakaran.

Tags : RS Mangalam ,Panchayat Union ,Disabled ,Officer ,Balasundaram ,Ilashasi ,Shanmukha Priya ,Parthiban ,
× RELATED துறையூரில் ரூ.6 கோடி மதிப்பில் புதிய...