×

மரபு வார விழாவிற்கென இலவச அனுமதி திருமலை நாயக்கர் மகாலில் அலைமோதிய கூட்டம்

மதுரை, நவ. 20: உலக மரபு வாரவிழாவை ஒட்டி நேற்று முதல் 25ம் தேதி வரை ஒரு வாரம் மதுரை திருமலை நாயக்கர் மகாலை இலவசமாக கண்டு களிக்கலாம் என்ற நிலையில், மகாலில் பார்வையாளர்கள் கூட்டம் நேற்று அதிகரித்தது. மதுரையின் அழகு அடையாளப் பெருமைக்குரியதாக திருமலை நாயக்கர் மகால் இருக்கிறது. தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இம்மகாலை மதுரை வரும் சுற்றுலா பயணிகள் துவங்கி பழமை ஆர்வலர்கள் வரை அனைவரும் வலம் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

இதற்கு நுழைவுக் கட்டணம் உண்டு. எனினும், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மரபு வாரத்தில் இலவசமாக கண்டு களித்திட அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, நேற்று நவ.19 துவங்கி நவ.25 வரையான உலக மரபு வார விழாவை ஒட்டி இலவசமாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

முதல் நாளான நேற்று கடந்த நாட்களை விடவும் மகாலில் மக்கள் கூட்டம் அதிகமிருந்தது. வெளியூர், வெளிமாநில சுற்றுலாப் பயணிகளுடன், உள்ளூர் மக்களும் குடும்பத்துடன் ஏராளமானோர் மகாலை காண வந்திருந்தனர். மகால் வரலாறு, மகாலுக்குள் நாடக சாலை, சிலை வளாகம், கல்வெட்டு பகுதிகளில் உள்ள தொல்லியல் பொருட்கள் குறித்து, பார்வையாளர்களுக்கு மகால் பணியாளர்கள் விளக்கமளித்தனர்.

The post மரபு வார விழாவிற்கென இலவச அனுமதி திருமலை நாயக்கர் மகாலில் அலைமோதிய கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Heritage Week ,Tirumala Nayakkar Mahal ,Madurai ,World Heritage Week ,Mahal ,Alaimothiya ,
× RELATED கண்ணாடி பார்க்கும் ராணி… பவனி வரும்...