×

ஜார்க்கண்டில் வெறுப்பு பிரசாரம் செய்ய ரூ.500 கோடி செலவு செய்த பாஜ: முதல்வர் ஹேமந்த் சோரன் பரபரப்பு குற்றச்சாட்டு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு இன்று இறுதி கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. 38 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இங்கு, ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணிக்கும் பாஜவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.  இந்நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும் அம்மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன் நேற்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது :

ஊரின் மையப்பகுதியில் உட்கார்ந்து கொண்டு பாஜவுக்கு ஆதரவாகவும், என்னை பற்றியும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு எதிராக பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு கிசுகிசு பிரசாரங்களை செய்ய ஏராளமானவர்களை பாஜ இந்த தேர்தலின்போது களமிறக்கியது. இதற்கு மட்டுமே ஒவ்வொரு கிராமத்துக்கும் ரூ.1 கோடிக்கும் அதிகமாக பாஜ செலவிட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், தங்கள் பொய்களை பரப்ப 95 ஆயிரம் வாட்ஸ் அப் குழுக்களை பாஜ உருவாக்கி உள்ளது. இப்படி எனக்கு எதிரான வெறுப்பு பிரசாரத்துக்கு மட்டும் ரூ. 500 கோடியை பாஜ கொட்டி கொடுத்துள்ளது. பாஜவின் பொய், வெறுப்பு பிரசாரத்தை தேர்தலில் மக்கள் நிராகரிப்பார்கள். இவ்வாறு ஹேமந்த் சோரன் குறிப்பிட்டுள்ளார்.

The post ஜார்க்கண்டில் வெறுப்பு பிரசாரம் செய்ய ரூ.500 கோடி செலவு செய்த பாஜ: முதல்வர் ஹேமந்த் சோரன் பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,Jharkhand ,Chief Minister ,Hemant Soran ,Ranchi ,Jharkhand Assembly elections ,Mukti Morcha ,Congress ,
× RELATED ஜார்க்கண்ட் முதலமைச்சராக 4-வது முறையாக...