புவனேஸ்வர்: ஒடிசாவில் 24 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தள கட்சியை தோற்கடித்து கடந்த ஜூன் 12ம் தேதி பாஜக ஆட்சி அமைத்தது. இந்நிலையில் நேற்று சட்டமன்ற கூட்டம் நடந்தது. அதில், பிஜு ஜனதா தள எம்எல்ஏ ஆதிராஜ் மோகன் பாணிக்ரகியின் கேள்விக்கு, முதல்வர் மோகன் சரண் மாஜி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
அதில், ‘ஜூன் 10 முதல் நவம்பர் 22ம் தேதி வரையிலான கடந்த 5 மாதங்களில் மாநிலம் முழுவதும் 769 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டதாக வழக்குகள் பதிவாகி உள்ளன. 41 கூட்டு பாலியல் பலாத்காரம் உள்பட 509 பெண்கள் வன்புணர்வும் நடந்துள்ளன. மேலும் கணவர் மற்றும் குடும்பத்தினர் சித்ரவதை செய்ததாக 9 ஆயிரத்து 248 வழக்குகள் பதிவாகியுள்ளன.
24 வரதட்சணை தொடர்பான மரணங்கள் மற்றும் 5,398 வரதட்சணை தொடர்பான சித்ரவதை வழக்குகள் பதிவாகியுள்ளன. கஞ்சம் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 509 பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
The post ஒடிசாவில் கடந்த 5 மாதங்களில் 769 சிறுமிகள் பலாத்காரம்: முதல்வர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.