×

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் பிரசார பயணம்

குலசேகரம்,நவ.20: இந்தியாவில் தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயம், பெருகி வரும் வேலையில்லா திண்டாட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறை, ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் என்ற பெயரால் ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி முறையை சீர்குலைக்க சதி, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் ஜனநாயக கோட்பாடுகள் பாதுகாக்க வேண்டும் போன்றவற்றை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று குலசேகரம் சுற்று வட்டார பகுதிகளில் பிரசார பயணம் மேற்கொள்ளப்பட்டது. திற்பரப்பில் தொடங்கிய பிரச்சாரம் மாலையில் குலசேகரம் காவல் ஸ்தலம் பகுதியில் நிறைவடைந்தது. இதற்கு கட்சியின் குலசேகரம் வட்டார செயலாளர் சௌந்தர் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் விஷ்வாம்பரன், வட்டார குழு உறுப்பினர்கள் சுபாஷ் கென்னடி, இன்பராஜ், ஜூடஸ் குமார், ஷாஜு, சிவகுமார், ஜெயசந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின் தாஸ் பிரசாரத்தை முடித்து வைத்து பேசினார்.

The post ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் பிரசார பயணம் appeared first on Dinakaran.

Tags : Union BJP government ,Kulasekaram ,India ,BJP government ,Dinakaran ,
× RELATED கேரளாவும் இந்தியாவில் தான் உள்ளது: பினராயி விஜயன்