×

இமானுவேல் சேகரன் மணிமண்டப பணிகளை தொடரலாம்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் மணிமண்டப பணிகளுக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவில் தலையிட விரும்பவில்லை என்று ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது. அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்காலத் தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். மணிமண்டபம் கட்டும் பணிகளை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு டிச.19-க்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைத்துள்ளது.

The post இமானுவேல் சேகரன் மணிமண்டப பணிகளை தொடரலாம்: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Emanuel Sekaran ,iCourt ,Madurai ,High Court ,Paramakudi ,Tamil ,Nadu ,iCourt branch ,Dinakaran ,
× RELATED கட்சி கொடி மரங்களை ஏன் அகற்ற கூடாது?: ஐகோர்ட் கிளை கேள்வி