×

10 ரூபாய் நாணயத்தை பரிவர்த்தனைக்கு அனைவரும் பயன்படுத்த வேண்டும்; கலெக்டர் அறிவுறுத்தல்

 

தஞ்சாவூர், நவ 19: 10 ரூபாய் நாணயத்தை அனைவரும் பரிவர்த்தனைக்கு பயன்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தியுள்ளார். சென்னை, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் முதன்மை செயலாளர் ஆணையாளர் 10 ரூபாய் நாணயத்தை சென்னை மாவட்டத்தை தவிர்த்து, ஏனைய மாவட்டங்களில் செயல்படும் எரிபொருள் நிலையங்கள், வர்த்தகங்கள், பொதுமக்கள் மற்றும் குறிப்பாக வங்கிகளில் ஏற்க மறுப்பதால் 10 ரூபாய் நாணயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட அறிவுறுத்தியுள்ளார்.எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிலையங்கள் வர்த்தகங்கள், பொதுமக்கள் மற்றும் வங்கிகளில் 10 ரூபாய் நாணயத்தினை அனைத்து பொதுமக்களும் பரிவர்த்தனைக்கு பயன்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

The post 10 ரூபாய் நாணயத்தை பரிவர்த்தனைக்கு அனைவரும் பயன்படுத்த வேண்டும்; கலெக்டர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Collector ,Priyanka Pankajam ,Chennai ,Principal Secretary Commissioner ,Food Supply and Consumer Protection ,
× RELATED தஞ்சையில் புகையிலை பொருட்கள் விற்பனை