×

படுக்கப்பத்து அரசு பள்ளி ரூ.9.90 லட்சத்தில் சீரமைப்பு

சாத்தான்குளம், நவ. 19: சாத்தான்குளம் ஒன்றியம் படுக்கப்பத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் ரூ.9.90 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் ரம்யா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் அந்தோணி ஆரோக்கியராஜ் வரவேற்றார். படுக்கப்பத்து ஊராட்சி தலைவர் தனலட்சுமி சரவணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சீரமைக்கப்பட்ட புதிய பள்ளி வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் எமி ஜாக்குலின், சமூக ஆர்வலர் சரவணன், உள்ளிட்ட பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். உதவி ஆசிரியர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.

The post படுக்கப்பத்து அரசு பள்ளி ரூ.9.90 லட்சத்தில் சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Padukpattu Government School ,Satankulam ,Union ,Padukappathu ,Panchayat ,Union Primary School ,District Education Officer ,Ramya ,Principal ,Anthony Arogyaraj ,Padukkapattu Panchayat… ,Padukkapattu Government School ,
× RELATED பேய்குளம், செங்குளம் பகுதியில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை