×

புதுச்சாவடி ஊராட்சியில் மருத்துவ முகாம் 200க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை

 

ஜெயங்கொண்டம், நவ.17: ஜெயங்கொண்டம் அருகே புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பொது மருத்துவம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன் தலைமையில் நடைபெற்றது. முகாமில் ஜெயங்கொ ண்டம் எம்எல்ஏ. க. சொ.க. கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றி, கர்ப்பிணி தாய்மார்கள், சர்க்கரை நோயாளிகள் உள்ளிட்டோர்களுக்கு மருந்து பெட்டகங்களை வழங்கினார்.

முகாமில், 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ்ச்செல்வி நடராஜன், ஒன்றிய திமுக செயலாளர் மணிமாறன்,, வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி ஒன்றிய குழு உறுப்பினர் நடராஜன், பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி மற்றும் மருத்துவ அலுவலர்கள் செவிலியர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

The post புதுச்சாவடி ஊராட்சியில் மருத்துவ முகாம் 200க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை appeared first on Dinakaran.

Tags : Puduchavadi panchayat ,Jeyangondam ,District Medical Officer ,Meghnathan ,Department of General Medicine and Preventive Medicine ,Puduchavadi Panchayat Union Primary School ,Jayangkondam ,
× RELATED மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த செயல்விளக்கம்