காட்டுமன்னார்கோவில், நவ. 17: காட்டுமன்னார்கோவில் அருகே குமராட்சி அடுத்த மேல வன்னியூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(40). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சாந்தி மகள் சர்மிளா என்பவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 6 வகுப்பு படிக்கும் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப பிரச்னை இருந்து வருகிறது.
நேற்று மீண்டும் கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தி இதற்கு காரணம் மாமியார் சாந்தி தான் என நினைத்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து சாந்தி மருமகன் தன்னை தாக்கியதாக கூறி குமராட்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து சத்தியமூர்த்தியை கைது செய்தனர்.
The post மாமியாரை தாக்கிய மருமகன் கைது appeared first on Dinakaran.