×

விக்னேஷ் சிவன் செய்தது மட்டும் நியாயமா? நயன்தாராவுக்கு இயக்குனர் சரமாரி கேள்வி

சென்னை: நடிகர் தனுஷுக்கு எதிராக நயன்தாரா வெளியிட்ட அறிக்கையும் விக்னேஷ் சிவனின் கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளரும் இயக்குனருமான எஸ்.எஸ்.குமரன். அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: மூன்று வினாடிக் காட்சிக்காக நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் உங்கள் மீது வழக்கு தொடர்ந்தற்காய் வெகுண்டு எழுந்த நீங்கள், கடந்த ஆண்டு எல்ஐசி என்ற என் தலைப்பை உங்கள் கணவர் விக்னேஷ் சிவன் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதை அறிந்திருப்பீர்கள்.

எல்ஐசி என்ற தலைப்பு என் நிறுவனத்தின் பெயரில் இருப்பதை அறிந்த விக்னேஷ் சிவன் தன் மேலாளர் மூலம் என்னிடம் கேட்டு, நான் வழங்காத நிலையிலும் அதே தலைப்பை அவர் படத்திற்கு வைத்து விளம்பரப்படுத்தியது எந்த வகையில் நியாயம்? ”என் கதைக்கும் அந்தத் தலைப்பிற்கும் பிரிக்க முடியாத ஒற்றுமை இருப்பதால் எல்ஐசி என்ற தலைப்பை வழங்க முடியாத சூழல் இருக்கிறது என்று நேர்மையான முறையில் பதில் அளித்தும் அதிகாரத் தன்மையுடன் அதே தலைப்பைத் தன் படத்திற்கு விக்னேஷ் சிவன் வைக்கிறார் என்றால், ‘உன்னால் என்ன பண்ண முடியும்’ என்ற அதிகார நிலை தானே காரணமாய் இருக்க முடியும்.

அதற்கு எந்தக் கடவுள் மன்றத்தில் விக்னேஷ் சிவனைப் பதில் சொல்ல சொல்வீர்களா? உங்களை விட பலம் பொருந்தியவர்கள் என்றால் இரண்டு வருடம் பொறுமையோடு பயன்படுத்த அனுமதி கேட்கும் நீங்கள், எளிய சிறிய படைப்பாளியான என்னிடம் எதேச்சதிகாரதோடு நடந்துக் கொண்டு, என்னை மன உளைச்சல் ஆக்கியதற்காய் நிச்சயம் கடவுள் மன்றத்தில் பதில் சொல்ல நேரிடும். நீங்கள் இங்கு எதையும் இலவசமாகச் செய்யவில்லை. எங்கள் படப்புகளை மட்டும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதன் மூலம் படைப்பூலகதிற்கு மிக மோசமான வழிக்காட்டியாக நீங்களும் உங்கள் கணவரும் இனங்காட்டப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

The post விக்னேஷ் சிவன் செய்தது மட்டும் நியாயமா? நயன்தாராவுக்கு இயக்குனர் சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Vignesh Sivan ,Saramari ,Nayantara ,Chennai ,Nayandara ,Dhanush ,S. S. KUMARAN ,
× RELATED அரசு ஓட்டலை விலைக்கு கேட்ட விவகாரம்;...