×

ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடுவின் சகோதரர் காலமானார்

திருமலை: ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சந்திரகிரி மண்டலம் நாராவாரிப்பள்ளி கிராமத்தில் நாரா கர்ஜுரா நாயுடு மற்றும் அம்மன்னம்மாவின் மூத்த மகன் தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. இரண்டாவது மகனாக ராம்மூர்த்தி நாயுடு பிறந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் ஒருவர் நடிகர் ரோஹித் மற்றவர் நார கிரிஷ். 1994ம் ஆண்டு சந்திரகிரி சட்டமன்ற தொகுதியில் ராம்மூர்த்தி நாயுடு எம்எல்ஏவாக வெற்றி பெற்று 1999 வரை மக்களுக்கு சேவை செய்தார். 2வது முறையாக சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

பின்னர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நாரா ராம்மூர்த்தி நாயுடு நேற்று மதியம் 12.45 மணியளவில் ஐதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் இறந்தார். தகவல் அறிந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மகாராஷ்டிராவில் தேர்தல் பிரசார பயணத்தை ரத்து செய்துவிட்டு ஐதராபாத் வந்தார். இன்று ராம்மூர்த்தி நாயுடு உடல் சிறப்பு விமானத்தில் திருப்பதிக்கு வந்து சொந்த ஊரான நாராவாரிபள்ளிக்கு கொண்டு வரப்பட்டு இறுதி சடங்கு நடைபெற உள்ளது.

The post ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடுவின் சகோதரர் காலமானார் appeared first on Dinakaran.

Tags : Andhra Chief Minister ,Chandrababu Naidu ,Tirumala ,Nara Karjura Naidu ,Ammannamma ,Chief Minister ,Andhra Pradesh ,Naravaripalli Village, Chandragiri Mandal, Tirupati District, Andhra Pradesh ,Rammurthy Naidu ,
× RELATED ஆந்திராவின் தலைநகர் அமராவதியில் 103...