×

என்ன பேசுகிறார், ஏது பேசுகிறார் தெரியவில்லை சீமான் பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை: பாலகிருஷ்ணன் பேட்டி

சென்னை: சென்னையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு ஜனவரி 3, 4, 5ம் தேதிகளில் விழுப்புரத்தில் நடக்கிறது. மாநில சுயாட்சி, மாநிலங்களின் உரிமைகளை பறிப்பது, இந்தி மொழியை திணிப்பது உள்ளிட்ட இந்த நடவடிக்கைகளை எதிர்த்து போராட உள்ளோம். 3ம் தேதி விழுப்புரத்தில் பிரமாண்ட பேரணி நடைபெற உள்ளது. இதில் அகில இந்திய தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார்கள்.

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று ஏற்கனவே நாங்கள் வற்புறுத்தியிருக்கிறோம். சில பேர் மாநில அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவோம். சீமான் பேசுவதற்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படவில்லை. அவர் என்ன பேசுகிறார், ஏது பேசுகிறார் தெரியவில்லை. காலையில் எழுந்தவுடன் என்ன தோன்றுகிறதோ அதை பற்றி எல்லாம் பேசுகிற ஒருத்தர் தான். சர்வாதிகாரியாக இருந்தால் தான் நாட்டுக்கு சிறப்பு என்றால், அவர் ஹிட்லருக்கே சிலை வைப்பார் போல இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post என்ன பேசுகிறார், ஏது பேசுகிறார் தெரியவில்லை சீமான் பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை: பாலகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Seiman ,Balakrishnan ,Chennai ,Secretary of State ,Marxist Communist Party ,Ler K. ,24th State Conference of the Marxist Communist Party ,Viluppura ,Dinakaran ,
× RELATED திருச்சி நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்