×

நாகை கடல் பகுதியில் இருந்து இலங்கை நாட்டின் காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் சேவை நிறுத்தம்!

நாகை: நாகை கடல் பகுதியில் இருந்து இலங்கை நாட்டின் காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 19ம் தேதி முதல் டிசம்பர் 18ம் தேதி வரை வானிலை காரணமாக நாகை மற்றும் காங்கேசன் துறை இடையேயான கப்பல் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் கடல் பகுதியில் இருந்து இலங்கை நாட்டின் காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வானிலை காரணமாக வருகிற 19ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 18ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு கப்பல் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்ததாவது; 2024 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி முதல் டிசம்பர் 18 ஆம் தேதி 2024 ஆம் ஆண்டு வரை வானிலை காரணமாக கப்பல் சேவை நிறுத்தப்படுவதற்கு முன்னதாக, நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை ஆகிய இரு பகுதிகளிலும் பயணிகளின் வசதிக்காக எங்கள் சிவகங்கை கப்பல் 2024 நவம்பர் 15, 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். டிசம்பர் 18, 2024க்குப் பிறகு நாங்கள் சேவையை மீண்டும் தொடங்குவோம், திட்டங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால் நாங்கள் உங்களுக்குத் தெரியப்படுத்துவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post நாகை கடல் பகுதியில் இருந்து இலங்கை நாட்டின் காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் சேவை நிறுத்தம்! appeared first on Dinakaran.

Tags : Nagai Sea ,Kangesan Port ,Sri Lanka ,Nagai ,Kangesan ,Dinakaran ,
× RELATED ரீல்ஸ் எடுக்க முயன்று ரயிலில் இருந்து கீழே விழுந்த இளம்பெண்!