×

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருப்பூர், நவ.15: பள்ளிக்கல்வித்துறை சார்பில் சாலை விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு பேரணி, மாவட்ட அளவிலான போட்டிகள் நேற்று நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய சாலை விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு பேரணியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார், மேட்டார் வாகன இன்ஸ்பெக்டர் விஜயா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நஞ்சப்பா அரசு ஆண்கள் பள்ளியில் நிறைவு பெற்றது. தொடர்ந்து சாலை விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு பேட்டிகளில் வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் 120 பள்ளிகளை சேர்ந்த 280 மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் ஓவியப்போட்டி,ஸ்லோகன்,நாடகம்,மைமிங் ஆகிய பேட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது. இந்த பேரணி, போட்டிகளை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கணேசன் ஒருங்கிணைப்பு செய்தார்.

The post சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Road Safety Awareness Rally ,Tirupur ,School Education Department ,Nanjappa ,Boys High School ,awareness and safety ,Nanjappa Boys High School District ,Principal ,Education ,Officer ,Dinakaran ,
× RELATED அரசுப் பள்ளிகளை யாருக்கும் தத்துக்...