×

மதன்பட்டவூர்:குழந்தைகள் தின விழாவில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள்

பேராவூரணி, நவ.15: பேராவூரணி ஒன்றியம், மதன்பட்டவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் சத்யா தலைமை வகித்தார் . பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

அலங்கரிக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு உருவப்படத்திற்கு மாணவர்கள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் இளமதியன் தனது சொந்த செலவில் மாணவர்கள் அனைவருக்கும் சந்தன மரக்கன்றுகள் வழங்கினார். பள்ளி மேலாண்மைக் குழு ஆசிரியை சூர்யா மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

The post மதன்பட்டவூர்:குழந்தைகள் தின விழாவில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் appeared first on Dinakaran.

Tags : Madanpattavoor ,Children's Day ,Peravoorani ,Peravoorani Union ,Madanpattavoor Panchayat Union Primary School ,School Management Committee ,Satya ,Parent Teacher Association ,President ,Muthukrishnan ,Jawaharlal Nehru ,
× RELATED பேராவூரணி பேரூராட்சி கூப்புலிக்காடு மயானத்தில் மரக்கன்றுகள் நடவு