×

பேராவூரணி பேரூராட்சி கூப்புலிக்காடு மயானத்தில் மரக்கன்றுகள் நடவு

பேராவூரணி , டிச.25: பேராவூரணி பேரூராட்சி கூப்புலிக்காடு மயானத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பேராவூரணி பேரூராட்சி கூப்புலிக்காடு பொது மயான கொட்டகை நீண்ட காலமாக சேதமடைந்த நிலையில் இருந்து வந்தது. இது குறித்து 16 வது வார்டு பேரூராட்சி கவுன்சிலர் முகிலன் பேரூராட்சி தலைவர் சாந்தி சேகருக்கு கோரிக்கை விடுத்ததையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா மேற்பார்வையில் மயானகொட்டகை மேம்படுத்தப்பட்டது.

ஏற்கனவே மயானத்தை சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டு பழமரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், பேரூராட்சி கவுன்சிலர் முகிலன் ஏற்பாட்டில் மயானத்தைச் சுற்றிலும் 100 தென்னங்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா ,பேரூராட்சி கவுன்சிலர் முகிலன், துப்புரவு ஆய்வாளர் செந்தில், கூப்புலிக்காடு கிராம பிரமுகர்கள் அன்பழகன், சிதம்பரம், கருப்பையன், தங்கமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post பேராவூரணி பேரூராட்சி கூப்புலிக்காடு மயானத்தில் மரக்கன்றுகள் நடவு appeared first on Dinakaran.

Tags : Peravoorani Town Panchayat ,Koupulikkadu ,Peravoorani ,Peravoorani Town ,Panchayat ,16th ,Ward Town Panchayat… ,Dinakaran ,
× RELATED பேராவூரணியில் மழை, தீவிபத்தில்...