×

71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா தமிழ்நாடு முழுவதும் கொண்டாட்டம் தொடங்கியது: கடன் பெற, வங்கி கணக்கு துவங்க சிறப்பு முகாம்கள் நடந்தன

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு வார விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் கூட்டுறவு வங்களில் கடன் பெற, வங்கி கணக்கு தொடங்க சிறப்பு முகாம்கள் நடந்தது. 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா 14ம் தேதி (நேற்று) தொடங்கி வருகிற 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த 2024 ஆண்டு கூட்டுறவு வாரவிழா ”தமிழ்நாட்டின் சமூக பொருளாதார மேம்பாட்டில் கூட்டுறவின் பங்கு” என்ற முதன்மை மையக் கருப்பொருளின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவு கொடி ஏற்றி வைத்து விழாவை நேற்று துவக்கி வைத்தார்.

கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில், கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் கொடி ஏற்றினர். தமிழகம் முழுவதும் கூட்டுறவுச் சங்கங்களில் கூட்டுறவுக் கொடி ஏற்றப்பட்டது. கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள், கூட்டுறவு சங்கங்களின் திட்டங்களை விளக்கும் சிறப்பு முகாம்கள், நலத்திட்ட உதவி வழங்குதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

The post 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா தமிழ்நாடு முழுவதும் கொண்டாட்டம் தொடங்கியது: கடன் பெற, வங்கி கணக்கு துவங்க சிறப்பு முகாம்கள் நடந்தன appeared first on Dinakaran.

Tags : 71st All India Co-operative Week celebrations ,Tamil Nadu ,CHENNAI ,Cooperation Week ,71st All India Cooperative Week ,71st All India Cooperative Week Celebrations ,Dinakaran ,
× RELATED போதையில்லா தமிழ்நாடு” என்ற தலைப்பில்...