×

ஈரோட்டில் காலிங்கராயன் வாய்க்கால் தொட்டி பாலம் இடிந்து விழும் அபாயம்


ஈரோடு: காலிங்கராயன் வாய்க்கால் கடந்து செல்லும் தொட்டி பாலம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஈரோடு நகரின் கிழக்கு பகுதியையொட்டி காலிங்கராயன் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால், ஈரோடு காரை வாய்க்கால் பகுதியில் உள்ள பெரிய மாரியம்மன் கோயிலை ஒட்டி செல்கிறது. கோயிலுக்கு தென்புறத்தில் பெரும் பள்ளம் ஓடை காளிங்கராயன் வாய்க்காலை கடந்து செல்கிறது. இந்த இடத்தில் பெரும்பள்ளம் ஓடையை கடந்து காலிங்கராயன் வாய்க்கால் தண்ணீர் செல்ல தொட்டி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ்பக்கம் பெரும் பள்ளம் ஓடை செல்ல, மேலே உள்ள தொட்டிப்பாலத்தின் வழியாக காலிங்கராயன் வாய்க்கால் செல்லும் விதமாக கட்டுமான செய்யப்பட்டுள்ளது.

காலிங்கராயன் வாய்க்கால் அமைக்கும் போது கட்டப்பட்ட இந்த பாலத்தின் கீழ்பகுதி தற்போது மிகவும் சிதிலமடைந்து, காரைகள் பெயர்ந்து, கற்கள் தெரியும் அளவுக்கு மிக மோசமான நிலையில் உள்ளது.
3 போக விளைச்சலுக்கு தண்ணீர் செல்லும் நிலையில் இந்த பாலம் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, அடுத்த தண்ணீர் நிறுத்த காலத்தில் இந்த பாலத்தை சீரமைத்து காலிங்கராயன் வாய்க்கால் நீர் தடையின்றி அதன் கடைமடை பகுதிக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஈரோட்டில் காலிங்கராயன் வாய்க்கால் தொட்டி பாலம் இடிந்து விழும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Kalingarayan canal ,Erode ,Mariamman temple ,Erode Karai canal ,Dinakaran ,
× RELATED ஈரோட்டில் மது போதையில் ஓட்டி வரப்பட்ட...