×

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே போலி பாஸ்போர்ட்டில் தங்கியிருந்த பங்களாதேஷ் இளைஞர் கைது..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே போலி பாஸ்போர்ட்டில் தங்கியிருந்த பங்களாதேஷ் இளைஞரை டெல்லி போலீஸார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். ராசிபுரம் அடுத்துள்ள குருசாமிபாளையம் அருகேயுள்ள ஆயிபாளையம் பகுதியில் போலி பாஸ்போர்ட்டில் தங்கியிருந்த பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த இளைஞர் உள்பட மூவரை புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

பங்களாதேஷ் சதிகிரா சாம்நகர் தானா பகுதியை சேர்ந்த மன்சூர் அலி என்பவர் மகன் மொமின் (33), இவர் கடந்த சில மாதங்களாக குருசாமிபாளையம் ஆயிபாளையம் பகுதியில் தங்கி அங்குள்ள நூற்பு ஆலையில் பணியாற்றி வருகிறார். இவர் பாஸ்போர்டில் தங்கியிருந்ததாக தெரிகிறது. இதே போல் அதே நாட்டை சேர்ந்த ராஜஹூல்லா என்பவர் மகன் சுமோன் (28) என்பவரும் சேலம் மாவட்ட ஒமலூர் பகுதியில் உள்ள கிரானைட் கம்பெனியில் பணியாற்றிவாறு தங்கியிருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இவர்களது நண்பரான பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த காம்ரூல் இஸ்லாம் மொண்டல் என்பவர் மகன் இஸ்ராபீல் மொண்டல் (34) என்பவர் போலி பாஸ்போர்ட்டில் டெல்லி வழியாக தப்பி வந்துள்ளார். இவர் தனது நண்பரான ஒமலூர் பகுதியில் தங்கியிருந்த சுமோன் உதவியுடன் ராசிபுரம் அருகேயுள்ள ஆயிபாளையம் வந்து மொமின் தங்கியிருந்த அறையில் அடைகலம் இருந்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த டெல்லி போலீசார் புதுசத்திரம் காவல் நிலைய காவல்துறையினர் உதவியுடன் போலி பாஸ்போர்ட்டில் தங்கியிருந்த இஸ்ராபீல் மொண்டல் என்பவரை கைது செய்தனர். மேலும், அவருக்கு அடைகலம் அளித்ததாக அதே நாட்டை சேர்ந்த பிற இளைஞர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட இஸ்ராபீல்மொண்டல் நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு டெல்லி அழைத்துச் செல்லப்பட்டார். பிற இளைஞர்கள் இருவரையும் புதுசத்திரம் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே போலி பாஸ்போர்ட்டில் தங்கியிருந்த பங்களாதேஷ் இளைஞர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Namakkal district ,Namakkal ,Delhi Police ,Ayipalayam ,Kurusamipalayam ,
× RELATED ராசிபுரத்தில் சோதனை:குட்கா பதுக்கிய கடைகளுக்கு அபராதம்