×

காலி பணியிடங்களை நிரப்பக்கோரி சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்

திருவாரூர், நவ. 14: காலி பணியிடங்களை நிரப்பிட கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூரில் கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். மாநிலம் முழுவதும் காலியாக இருந்து வரும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும். குறைந்தபட்ச மாத ஒய்வூதியமாக ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்ப்பட்டது.

The post காலி பணியிடங்களை நிரப்பக்கோரி சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Tamil Nadu Civil Servants Association ,Office ,Thiruvarur, ,Tamil Nadu Chaturthi Employees Association ,Ramasamy ,
× RELATED பல மருத்துவகுணம், நோய் எதிர்ப்பு சக்தி...