×

முத்துப்பேட்டை அரசு பள்ளி மாணவர்கள் புத்தகம் வாசிப்பு

முத்துப்பேட்டை, நவ. 14: முத்துப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் நூலக வாசிப்போர் இயக்கம் சார்பில் நூலகம் சென்று நடைமுறைகளை தெரிந்துகொண்டனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் நூலக வாசிப்போர் இயக்கம் சார்பில் முத்துப்பேட்டை கிளை நூலகம் சென்று நூலக நடைமுறைகளை தெரிந்து கொண்டனர்.

அமைதிகாத்திடவும், தமக்கு தேவையான புத்தகத்தை தேர்வு செய்து படித்திடவும், கணினியை பயன்படுத்தி தன் தேடலுக்கு தீர்வு கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டனர். பள்ளி தலைமையாசிரியர் பரமசிவன் மாணவர்களை வாழ்த்தி வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறினார். நூலகர் ஆசைத்தம்பி, ஆசிரியர் ராஜகுமாரன், திட்ட அலுவலர் ராஜாராம் மாணவர்களை வாழ்த்தி நூலகத்தின் பயன்பாடு பற்றி விளக்கினர். முன்னதாக நூலக பணியாளர் செந்தமிழ் செல்வி வரவேற்றார். நிறைவில் மாணவர்கள் நன்றி கூறினர்.

The post முத்துப்பேட்டை அரசு பள்ளி மாணவர்கள் புத்தகம் வாசிப்பு appeared first on Dinakaran.

Tags : Muthupet Government School ,Muthupet ,Muthuppet Government Higher Secondary School National Welfare Project ,Library Readers Movement ,Tiruvarur District ,Muthuppet Government Higher Secondary School National Welfare Program ,Library Reading Movement ,Dinakaran ,
× RELATED கீழபெருமழை கிராமத்தில் பழுதடைந்த...