×

தனிப்படை போலீசாருக்கு எஸ்பி பாராட்டு

 

திருப்பூர்,நவ.13: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பானி பூரி விற்று கொண்டிருந்தவர் சுரேஷ் ஷா. பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் திருநெல்வேலியை சேர்ந்த செல்வி என்ற பெண்ணை கடந்த 2013ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்னையில் சுரேஷ் ஷா, தனது மனைவி செல்வியை அடித்து கொலை செய்து விட்டு தலைமறைவானார்.

இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ் ஷாவை தேடி வந்தனர். தொடர்ந்து கடந்த 11 ஆண்டுகளாக சுரேஷ் ஷா குறித்து போலீசாருக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் எஸ்பி அபிஷேக் குப்தா உத்தரவு படி, டி.எஸ்.பி சுரேஷ்குமார் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.

இதில் சுரேஷ் ஷா (48) என்பவர் டெல்லியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து எஸ்ஐ சிவராஜ் தலைமையிலான போலீசார் டெல்லி சென்று கொலை வழக்கில் தொடர்புடைய சுரேஷ் ஷாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றிய எஸ்ஐ சிவராஜ், போலீஸ் கார்த்திக், மதியழகன், ராமர், பாபுராஜ் ஆகியோரை எஸ்பி அபிஷேக் குப்தா நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

 

The post தனிப்படை போலீசாருக்கு எஸ்பி பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Suresh Shah ,Bani Puri ,Tharapuram ,police station ,Tiruppur district ,Bihar ,Tirunelveli ,
× RELATED அனைத்து வணிக நிறுவனங்களில் தமிழில்...