- காஞ்சிபுரம் நகர திமுக கிளை முகவர்கள் கூட்டம்
- காஞ்சிபுரம்
- சட்டமன்ற உறுப்பினர்
- எஹிலரசன்
- திமுக
- காஞ்சிபுரம் நகரம்
- காஞ்சிபுரம் நகர திமுக கட்சி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
- மாநகர செயலாளர்
- தமிழ்செல்வன்
- சந்துரு
- திலகர்
- வெங்கடேசன்
- காஞ்சிபுரம் மாநகர திமுக கிளை முகவர்கள்
- தின மலர்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகர திமுக பாக முகவர்கள் கூட்டத்தில், எம்எல்ஏ எழிலரசன் பங்கேற்றார். காஞ்சிபுரம் மாநகரம் திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடந்தது. அதில், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர்கள் சந்துரு, திலகர், வெங்கடேசன், தசரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலோசனைக் கூட்டத்தில், காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ எழிலரசன் கலந்துக்கொண்டு, பாகநிலை முகவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், தேர்தல் பணிக் குழு அமைப்பது குறித்தும் எடுத்துரைத்தார். மேலும், ஒவ்வொரு பாகநிலை முகவர்களையும் தனியாக அழைத்து அவர்களின் விவரங்களை சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் பா.அருண்குமார் சரிபார்த்தார். இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகர நிர்வாகிகள் முத்து செல்வம், சுப்பராயன், நிர்மலா மாநகர, பகுதி, வட்ட, கிளைக் நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.
The post காஞ்சிபுரம் மாநகர திமுக பாக முகவர்கள் கூட்டம் appeared first on Dinakaran.