×

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி கல்லூரியை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்..!!

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி கல்லூரியை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள பழமையான மற்றும் பிரபலமான கல்லூரி ஒன்று மீனாட்சி கல்லூரி. சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்த கல்லூரி மகளிர் கல்லூரி. இந்த கல்லூரியில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அதிகப்படியாக படிப்பதாக கருத்தும் நிலவி வருகிறது.

அதற்கு ஏற்றவாறு அந்த கல்லூரி நிர்வாகமானது மத ரீதியிலான விஷயங்களை முன்னெடுத்து வருவதாகவும் அண்மையில் சில குற்றசாட்டுகள் பரவி வந்த சூழ்நிலையில் இன்று ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோடம்பாக்கம் கல்லூரி அமைந்துள்ள பகுதியில் காளிகாம்பாள் என்னும் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு மத குருவை வரவழைத்து நிகழ்ச்சி நடத்துவதற்காக கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. பெங்களூருவை மையமாக கொண்ட ஸ்ரீ சேகர பரதீஸ்வரர் என்பவர் ஆலயத்திற்கு வருகை தந்திருக்கிறார்.

இந்த மதகுருவை வைத்து கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே ஒரு நிகழ்ச்சியை நடத்த கல்லூரி நிர்வாகமானது ஏற்பாடு செய்துள்ளது. கோயிலுக்கு அருகே நிகழ்ச்சியை நடத்தாமல் கல்லூரி வளாகத்திற்குள் மத அடிப்படையிலான நிகழ்ச்சியை அந்த கல்லூரி நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சியை அனைத்து மாணவிகளும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு அறிவிப்பை எச்சரிக்கை விடுக்கும் வகையில் கல்லூரி நிர்வாகம் விடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக கல்லூரியின் வரலாற்று துறை விரிவுரையாளரை கொண்டு ஒரு ஆடியோ பதிவை அந்த கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், இன்று நடைபெற கூடிய நிகழ்ச்சியில் மாணவிகள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்றும் அப்படி பங்கேற்காத மாணவிகளுக்கு தேர்வில் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கையை ஆடியோ பதிவில் அந்த ஆசிரியர் பேசியுள்ளார். இத்தகைய சம்பவம் இந்திய மாணவர் சங்கத்திற்கு தெரிய வந்து அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கும் இப்படிப்பட்ட கருத்தை தெரிவித்த கல்லூரி நிர்வாகத்திற்கும் எதிராக ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியை நடத்த கூடாது என கல்லூரி வளாகத்திற்கு முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் 20 பேர் கூடியுள்ளனர் அதில் 6 பெண்களும் அடங்குவர். இவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி இப்படிப்பட்ட மத ரீதியிலான நிகழ்ச்சிகளை நீங்கள் ஊக்குவிக்க கூடாது, மாணவிகளிடம் கட்டாயமாக திணிக்கக்கூடாது என்ற கருத்தை கூறி அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு முன்னதாகவே அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், மத அடிப்படையிலான நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து மீனாட்சி கல்லூரி நிர்வாகமானது ஒரு நிகழ்ச்சியை மாணவிகள் மத்தியில் நடத்துவதும் அதற்கு மாணவர்களை கட்டாயமாக பங்கேற்க வேண்டும் என வற்புறுத்துவதும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்ப்பு தெரிவித்து இந்த கண்டன முழக்கங்களோடு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர் கைது செய்யபட்டுள்ள போதும் இன்னும் வேறு சில அமைப்புகள் ஏதேனும் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்ற அடிப்படையில் கல்லூரிக்கு அருகே காவல்துறை அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

The post சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி கல்லூரியை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Indian Student Union ,Meenadashi College ,Kodambakkam, Chennai ,Chennai ,Indian Students' Associations ,Meenakshi College ,
× RELATED சாப்பிட்ட பிரியாணிக்கு பணம் கேட்ட கடை...