வளசரவாக்கம்: சென்னை கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனியில் ரோஷன் என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். அப்பகுதியில் பிரபலமான கடை என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும். இதற்கிடையே நேற்று முன்தினம் பிரியாணி கடைக்கு அகில பாரத இந்து மக்கள் அமைப்பின் துணை தலைவர் மாயாஜி தலைமையில் கிஷோர், நரேந்திரன் ஆகியோர் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். அப்போது, 3 பேரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பிறகு சாப்பிட்ட பிரியாணிக்கு கடை ஊழியர் பணம் கேட்டுள்ளார்.
மாயாஜி ‘யாரிடம் பணம் கேட்கிறாய்…. தினமும் நீ தான் எனக்கு ரூ.10 ஆயிரம் பணம் தர வேண்டும்’ என்று மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர், கடை ஊழியரை அவரது காலில் வழி வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் ரோஷன் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து அகில பாரத இந்து மக்கள் அமைப்பு துணை தலைவர் மாயாஜி உள்ளிட்ட 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சாப்பிட்ட பிரியாணிக்கு பணம் கேட்ட கடை ஊழியரை காலில் விழ வைத்து தாக்குதல்: இந்து அமைப்பு நிர்வாகி உள்பட 3 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.