×

இலங்கை மீது பொருளாதார தடை: சீமான் வலியுறுத்தல்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டி:
தமிழக மீனவர்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடிக்கின்றனர் என்றும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க கூறியுள்ளார். ஏற்கனவே இலங்கையில் தமிழர்களை சுட்டு கொன்றார்கள். மீனவர்களின் வலைகளை கிழித்து எறிந்தனர். இதற்கு மேல் என்ன நடவடிக்கை எடுக்க போகின்றனர்.

இந்திய பெருங்கடல் என்று அழைத்தால் போதுமா? அதில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு உரிமை இல்லையா?. இலங்கையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். என் பயணம் என் கால்களை நம்பிதான் உள்ளது. அடுத்தவர் கால்களை நம்பி பயணத்தை தொடங்காதீர்கள். என் கொள்கை யாரோடும் ஒத்து போகவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post இலங்கை மீது பொருளாதார தடை: சீமான் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Seaman ,Thoothukudi ,Tamil Party ,Chief Coordinator ,Seiman ,Chennai ,
× RELATED ரீல்ஸ் எடுக்க முயன்று ரயிலில் இருந்து கீழே விழுந்த இளம்பெண்!