- திண்டிகுல் கலெக்டர் அலுவலகம்
- திண்டுக்கல்
- திண்டுக்கல் கலெக்டர்
- கலெக்டர்
- Poongodi
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
திண்டுக்கல், நவ. 12: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் வந்து கலெக்டர் பூங்கொடியிடம் மனு அளித்தனர். அம்மனுவில் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 2011- 2012ம் கல்வியாண்டு முதல் அரசு நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 400 பகுதிநேர ஆசிரியர்கள் முறையான நியமனத்தில் அரசு பள்ளி மாணவர்களின் பன்முக திறன்களை மேம்படுத்தும் பொருட்டு ரூ.12,500 ஊதியத்தில் பணியாற்றி வருகிறோம்.
குறைவான ஊதியம் என்றாலும் அரசு பள்ளி மாணவர் நலன் கருதி பணியாற்றி வருகிறோம். கடந்த 13 ஆண்டுகளாக பணி நிரந்தர கோரிக்கை நிறைவேறாமல் உள்ளமையால் 12,000க்கும் மேற்பட்ட அரசு பள்ளி பகுதிநேர ஆசிரியர்களின் குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் வேதனை அறிந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அளித்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே கலெக்டர் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தனர்.
The post திண்டுக்கல் கலெக்டர் ஆபீசில் பணி நிரந்தரம் செய்ய கோரி பகுதி நேர ஆசிரியர்கள் மனு appeared first on Dinakaran.