- ஆறுமுகநேரி நடராஜ நகர் நடராஜ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
- அருமுக்கனேரி
- நடராஜ நகர்
- நடராஜ விநாயகர் கும்பாபிஷேக விழா
- கும்பாபிஷேக் விழா
- கணபதி
- சுதர்சன ஹோமம்
- லட்சுமி ஹோமம்
- நவக்கிரக ஹோமம்
- ஆறுமுகநேரி நடராஜநகர் நடராஜ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
ஆறுமுகநேரி, நவ.12: ஆறுமுகநேரி நடராஜநகர், நடராஜ விநாயகர் கும்பாபிஷேக விழா 3 நாட்கள் நடந்தது. கும்பாபிஷேக விழாவானது கடந்த 6ம் தேதி புதன்கிழமை காலை மங்கள இசை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோமாதா பூஜை, சுமங்கலி பூஜை நடந்தது. மதியம் 12 மணிக்கு அலங்கார பூஜையும், தீர்த்தம் எடுத்து வருதலும், இரவு 7 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜை மற்றும் முதல் யாகசாலை பூஜை ஆகியவை நடந்தது. 2-வது நாளான 7ம் தேதி காலை தேவாரம் 2-ம் யாகசாலை பூஜை நடைபெற்றது. அன்று இரவு 8 மணிக்கு விநாயகருக்கு யந்திர ஸ்தாபனம் பூஜை நடந்தது. அடுத்த நாள் காலை 3-ம் கால யாகசாலை பூஜையும், யாகசாலையில் இருந்து கும்பம் புறப்பாடு ஆகியவை நடந்தது. தொடர்ந்து காலை 6 மணிக்கு கோபுர விமான கலசத்தில் மகா கும்பாபிஷேக தீபாராதனையும், நடராஜ விநாயகருக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. அதனைத்தொடர்ந்து மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக பூஜையை பட்டாச்சாரியார் பாபு அர்ச்சகர் செய்தார். விழாவில் ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி, துணைத்தலைவர் கல்யாணசுந்தரம் செயல்அலுவலர் உஷா, தொழிலதிபர் கே.டி ஜானகிராமன், வசந்தி உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆறுமுகநேரி பேரூராட்சி 17வது வார்டு கவுன்சிலர் ஆறுமுகநயினார் மற்றும் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் செய்திருந்தனர்.
The post ஆறுமுகநேரி நடராஜநகர் நடராஜ விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.