அருமனை : அருமனை அருகே ஆறுகாணி ஒருநூறாம் வயல் பகுதியை சேர்ந்தவர் அகில் (32). அவரது மனைவி ரம்யா (28). இந்த தம்பதிக்கு 8, 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் ரம்யா கணவரை பிரிந்து கடந்த 2 ஆண்டுகளாக தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். மேலும் அவர் கேரள மாநிலம் வெள்ளறடையில் உள்ள ஒரு பேன்சி கடையில் வேலை செய்து வந்தார்.
இதற்கிடையே நேற்றுமுன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ரம்யாவின் தந்தை சுரேந்திரன் ஆறுகாணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 2 குழந்தைகளின் தாயை தேடி வருகின்றனர்.
The post அருமனை அருகே 2 குழந்தைகளின் தாய் மாயம் appeared first on Dinakaran.