- நாகோர் இறைவன்
- வேலங்கண்ணி கதீட்ரல்
- தர்கா கந்தூரி விழா
- நாகப்பட்டினம்
- நாகோர் அந்தவர் காந்தூரி திருவிழா
- முதல்வர்
- வேளாங்கண்ணி
- கதீட்ரல்
- நாகூர் ஆண்டவரின்
- நாகூர், நாகப்பட்டினம் மாவட்டம்
- நாகூர் ஆண்டவர் தர்காவின் 468வது பிரம்மாண்டமான கந்தூரி விழா
- கோவில்
- வேந்தர்
- நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா
நாகப்பட்டினம், நவ.11: நாகூர் ஆண்டவர் கந்தூரி விழா அழைப்பிதழை வேளாங்கண்ணி பேராலய அதிபரிடம் வழங்கி அழைப்பு விடுக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. நாகூர் ஆண்டவர் தர்காவின் 468வது பெரிய கந்தூரி விழா வரும் டிசம்பர் 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற டிசம்பர் 11ம் தேதி காலை சந்தனகூடு ஊர்வலம் தொடங்கி 12ம் தேதி அதிகாலை சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மொத்தம் 14 நாட்கள் நடைபெறும் நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவைக் காண தமிழ்நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான யாத்ரீகர்கள் வருகை தருவார்கள்.
இந்நிலையில் நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா அழைப்பிதழை தர்கா தலைமை அறங்காவலர் செய்யது முஹம்மது காஜி ஹுசைன், வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜிடம் வழங்கினார். அழைப்பிதழை பெற்றுக்கொண்ட பேராலய அதிபர் விழாவிற்கு வருகை தருவதாக கூறினார். நாகூர் சித்திக் சேவைக் குழுமம் தர்ம அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சித்திக், நாகூர் தர்கா அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.
The post நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவுக்கு வேளாங்கண்ணி பேராலய அதிபரிடம் அழைப்பிதழ் வழங்கி அழைப்பு appeared first on Dinakaran.