×
Saravana Stores

சிவகாசி-நாரணாபுரம் சாலையை சீரமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

 

சிவகாசி, நவ. 11: சிவகாசி-நாரணாபுரம் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். சிவகாசி-நாரணாபுரம் பகுதியில் பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி ஆலைகள் ஏராளமாக உள்ளன. முருகன்காலனி, உசேன்காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கும் கன்னிசேரிபுதூர், ஆர்.ஆர்.நகருக்கும் சிவகாசி-நாரணாபுரம் சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்நிலையில் இச்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயமுள்ளது.

மேலும், அப்பகுதியில் உள்ள கிராமப் புறங்களிருந்து நகர் பகுதிக்கு வேலைக்கு டூவீலரில் வாகனங்களில் வந்து செல்லும் தொழிலாளர்கள் இச்சாலையை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இச்சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.  மேலும், மழைக் காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்குவதால், நடந்து செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே, இந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சிவகாசி-நாரணாபுரம் சாலையை சீரமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : SIWAKASI-NARANAPURAM ROAD ,Sivakasi ,Sivakasi-Naranapuram ,Kanniseriputur, R. R. ,Sivakasi-Naranapuram road ,Dinakaran ,
× RELATED பட்டாசுகள் வெடித்து ஒருவர் கருகி பலி