×

இந்துஸ்தான் கல்லூரியில் சுனாமி விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

திருப்போரூர்,நவ.11: சென்னையை அடுத்த படூரில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுனாமி விழிப்புணர்வு தின நிகழ்ச்சி கொண்டாடப் பட்டிருந்தது. கல்லூரி முதல்வர் உத்திரா வரவேற்றார். கல்லூரி இயக்குனர் சூசன் வர்கீஸ் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் இயற்கைப் பேரிடர்களிலிருந்து கடலோரப் பகுதிகளைக் காக்கும் சதுப்புநிலக் காடுகளை பாதுகாத்தல், சதுப்பு நிலங்களின் முக்கியத்துவம், கடலோரப் பகுதிகளை வளமாக்குதல், மண்ணரிப்பைத் தடுத்தல், கார்பன் வரிசைப்படுத்துதல் ஆகியவற்றில் சதுப்புநிலங்களின் பங்கு ஆகியவை குறித்து பேராசிரியர்கள் சாமுவேல் சுகுமார் மற்றும் வின்சென்ட் ஆகியோர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை ரோட்டரி சங்கத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவுத் தலைவர் சாய் கிருஷ்ணா சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிப் பேசினார். இதைத் தொடர்ந்து சதுப்புநில மரங்களை நடுதலிலும் பாதுகாத்தலிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட மாங்குரோவ் கிளப் எனப்படும் சதுப்புநிலச் சங்கம் என்னும் அமைப்பு தொடங்கப்பட்டது. மேலும், அறிவியல் புல முதன்மையர் சி.எலிசபெத் ராணி தொகுத்த “கடலோர நிலப் பாதுகாவலர்களை மீட்டெடுத்தல் : சதுப்புநில மறுசீரமைப்பிற்கான விரிவான வழிகாட்டி” என்னும் நூல் வெளியிடப்பட்டது.

The post இந்துஸ்தான் கல்லூரியில் சுனாமி விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tsunami ,Hindustan College ,Tirupporur ,Tsunami Awareness Day ,Hindustan College of Arts and Science ,Badur ,Chennai ,Uthira ,Susan Varghese ,
× RELATED சுனாமி 20ம் ஆண்டு நினைவு தினம்; காசிமேடு, மெரினாவில் மீனவர்கள் திரண்டனர்