×

செங்கல்பட்டு நகர பாஜ தலைவர் பொறுப்பேற்பு

 

செங்கல்பட்டு‌, டிச. 30: தமிழக பாஜவில் ஒன்றிய, நகர அளவிலான மண்டல தேர்தல்கள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்தில், செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செங்கல்பட்டு நகர பாஜ தலைவராக வி.மகேஸ்வரன் கட்சியின் கிளைத் தலைவர்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு மண்டல தலைவராக நேற்று கட்சியின் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மண்டல தேர்தலுக்கான காஞ்சிபுரம் நாடாளுமன்ற பொறுப்பாளர் சம்பத்ராஜ், மாவட்டத் தேர்தல் இணைப் பொறுப்பாளர் குருமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட மண்டல தலைவர்களை‌ அறிவித்து வாழ்த்துரை வழங்கினர். இதில் பாஜ மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

The post செங்கல்பட்டு நகர பாஜ தலைவர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu City ,BJP ,Chengalpattu ,Tamil ,Nadu ,V. Maheswaran ,Chengalpattu City BJP ,President ,Chengalpattu Assembly ,Chengalpattu North district ,Dinakaran ,
× RELATED கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய இருவர் கைது