×

வெள்ளக்கோவில் அருகே நாய்கள் கடித்ததில் ஆடு பலி

வெள்ளக்கோவில், நவ.10: வெள்ளக்கோவில் அருகே திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வீராச்சாமி (55). விவசாயியான இவர், தனது தோட்டத்தில் 30 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று அப்பகுதியைச் சேர்ந்த சில நாய்கள் அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை கடித்து விட்டது. இதில் ஒரு ஆடு உயிரிழந்தது. இரு ஆடுகள் கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்த ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

தொடர்ந்து காங்கயம் வெள்ளக்கோவில் பகுதியில் ஆடுகளை நாய்கள் கடித்து வருவது விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது. மேலும் இறந்த ஆடுகளுக்கு வருவாய்துறை சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வெள்ளக்கோவில் அருகே நாய்கள் கடித்ததில் ஆடு பலி appeared first on Dinakaran.

Tags : Veliko ,Velakkovil ,Weerachami ,Thirumangalam ,Vilakovo ,
× RELATED மணல் கடத்திய லாரி பறிமுதல்