×

எழிலூர் கிராமத்தில் பனை விதை நடவு விழா

திருத்துறைப்பூண்டி, நவ. 10: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட எழிலூர் கிராம பஞ்சாயத்தில் பனை மேம்பாட்டு இயக்கத் திட்டத்தின் கீழ் 2500 பனை விதைகள் விதைப்பு விழா நடந்தது. திருத்துறைப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் தொடங்கி வைத்தார். தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் முன்னிலை வகித்தார். மேலும், ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் கூறுகையில், இவ்வாண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமத்தில் நீர் நிலைகள் மேம்படுத்தும் விதமாக பனை விதைகள் எழிலூர் கிராமம் செல்லியம்மன் கோவில் அருகில் சாலையில் விவசாயி வயலில் உள்ள அருகாமையில் பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளது என்றார்.

நிகழ்ச்சியின் போது, ஊராட்சித் துணைத் தலைவர் செல்லமணி, ஒன்றிய கவுன்சிலர் பத்மா, ஊராட்சி செயலர் செல்வம் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் அரிகரன் புலவேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post எழிலூர் கிராமத்தில் பனை விதை நடவு விழா appeared first on Dinakaran.

Tags : seed planting ,Ezhilur village ,Thirutharapoondi ,Ezhilur ,Thirutharapoondi Union Committee ,
× RELATED போதை பொருட்கள் எதுவும்...