×

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20: 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

டர்பன்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 61 வித்தியாசத்தில் ரன்கள் இந்திய அணி வெற்றி பெற்றது. டர்பனில் நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 202 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 10 சிக்சர்களுடன் 107 ரன்கள் குவித்து அபாரமாக விளையாடினார். தென் ஆப்பிரிக்க தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி 3 இந்திய விக்கெட்டுகளை கைப்பற்றினார். 203 என்ற இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 17.5 ஓவர்களில் 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய வீரர்கள் வருண் சக்ரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

The post தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20: 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : T20 ,South Africa ,India ,Durban ,Dinakaran ,
× RELATED உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்...