×

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் மாணவர் சேர்க்கை தொடக்கம்: விண்ணப்பிக்க நவம்பர் 15 கடைசி நாள்

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் பல்கலைக்கழக பதிவாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25ம் கல்வியாண்டில் 16 இளநிலைப் பட்டப் படிப்புகள் 15 முதுநிலை பட்டப் படிப்புகள், 44 தொழிற்கல்வி பட்டயப் படிப்புகள், சான்றிதழ் படிப்புகள் என மொத்தம் 75 படிப்புகள் நடத்தப்படுகின்றன.

இவற்றில் மாணவர் சேர்க்கை தற்போது துவங்கியுள்ளது. www.tnou.ac.in என்ற இணையதளம் வாயிலாக சேர்க்கை பெறலாம். மாணவர் சேர்க்கைக்கான கடைசி நாள் நவம்பர் 15ம் தேதியாகும். கூடுதல் விவரங்களுக்கு 9345913378 மற்றும் 044-24306614/15, என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் மாணவர் சேர்க்கை தொடக்கம்: விண்ணப்பிக்க நவம்பர் 15 கடைசி நாள் appeared first on Dinakaran.

Tags : TAMIL NADU ,OPEN ,Chennai ,Tamil ,Nadu Open University Registrar ,Sentil Kumar ,Tamil Nadu Open University Registrar ,Tamil Nadu Open University ,
× RELATED மணல் குவாரிகளை அரசு நடத்துவது போல...