×

சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்


சென்னை: கனடா நாட்டில் இந்து கோயில்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உதவி ஆணையர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டத்தில் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட 11 பேர் மட்டுமே ஈடுபட்டனர். அர்ஜுன் சம்பத்தின் கார் ஓட்டுநரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதானதால், அவரது கார், சாலையில் கேட்பாரற்று நின்றது. பின்னர், காரை எடுத்துச் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

The post சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Hindu People's Party ,Chennai ,Hindu ,Canada ,Assistant Commissioner ,Arjun Sampath ,Hindu People ,Party ,
× RELATED 2025ம் ஆண்டுக்கான நாட்காட்டியை வெளியிட்டார் அமைச்சர் சேகர்பாபு