×

பாடப்புத்தகமும் விநியோகம்; அரையாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு

சென்னை, ஜன.3: அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் நேற்று செயல்படத் தொடங்கின. பள்ளிக்கு வந்த 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு 3ம் பருவப் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு பிளஸ் 1, பிளஸ்2 வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக செய்முறைத் தேர்வுகளை டிசம்பர் 2ம் தேதி முதல் 6ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட்டன. அதற்குப் பிறகு தேர்வுகள் 16ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடந்தது. புயல் மற்றும் மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட மாவட்டங்களில் 23ம் தேதியில் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டன. அதே நேரத்தில் கீழ் வகுப்புகளுக்கும் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.

இதையடுத்து, 24ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, திட்டமிட்டபடி பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் சுமார் 13 ஆயிரம் தனியார் பள்ளிகளும் நேற்று முதல் வழக்கம் போல செயல்படத் தொடங்கின. இந்நிலையில், அரசு மற்றும் அரசு நிதியுதவி ெபறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கான 3ம் பருவப் பாடப்புத்தகங்கள் அனைத்து பள்ளிகளிலும் நேற்று சுமார் 2 கோடி புத்தகங்கள் வழங்கப்பட்டன. சென்னையில் எழும்பூர் மகளிர் பெண்கள் பள்ளியில் மாணவியருக்கான 3ம் பருவப் பாடப்புத்தகங்களை பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் வழங்கினார்.

The post பாடப்புத்தகமும் விநியோகம்; அரையாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai, ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED நீதிபதிகள் குடியிருப்பில் மின்கட்டண...