×

கமல்ஹாசன் 70வது பிறந்தநாளையொட்டி 70 மநீம உறுப்பினர்கள் உடல் உறுப்புகள் தானம்

சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் 70வது பிறந்தநாளை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் துணைத் தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, தங்கவேலு, பொதுச்செயலாளர் அருணாச்சலம் ஆகியோர் தலைமையில் கொண்டாடினர். ம.நீ.ம கட்சியைச் சேர்ந்த 70 பேர் உடல் உறுப்பு தானம் செய்தனர். கட்சியில் உள்ள நலிந்த 20 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம், 600 பேருக்கு (பிரியாணி) உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், ம.நீ.ம கட்சியின் செயலாளர் செந்தில் ஆறுமுகம், முரளி அப்பாஸ், எஸ்.பி.அர்ஜூனர், சென்னை மண்டல செயலாளர் மயில்வாகனம், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை ஒருங்கிணைப்பாளர் சொக்கர், மாநில செயற்குழு உறுப்பினர் சினேகா மோகன்தாஸ், மாவட்ட செயலாளர்கள் த.சண்முக சுந்தரம், ஓம் பிரகாஷ், சைதை கதிர், வசந்த் சிங், மாறன், பாசில், மாவட்ட துணை செயலாளர் வேளச்சேரி சண்முக சுந்தரம், பொறியாளர் அணி மண்டல அமைப்பாளர் அரவிந்ராஜ், மாணவரணி ஒருங்கிணைப்பாளர் ராகேஷ், மாடசாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கமல்ஹாசன் 70வது பிறந்தநாளையொட்டி 70 மநீம உறுப்பினர்கள் உடல் உறுப்புகள் தானம் appeared first on Dinakaran.

Tags : Manima ,Kamal Haasan ,CHENNAI ,Makkal Neeti Mayyam Party ,Alwarpet, Chennai ,AG ,Maurya ,Thangavelu ,general secretary ,Arunachalam ,MNM ,
× RELATED பெருங்கவிஞர் பாரதி பிறந்தநாளில்...