×

5 ஆண்டுகளில் மாபெரும் சாதனை.. 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை நோக்கி செல்லும் தமிழ்நாடு!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில்…

* 5 ஆண்டுகளில் புதிதாக 30 சிப்காட் தொழில் வளாகங்கள்!

* 816 புதிய தொழிற்சாலைகளுக்கு 7558 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு!

* தூத்துக்குடி வின்பாஃஸ்ட் மின்வாகனத் தொழிற்சாலை!

* இராணிப்பேட்டையில் ஜாகுவார் லேண்டு ரோவர் கார் ஆலை!

* ஜெயங்கொண்டத்தில் காலணி தொழிற்சாலை!

* கிருஷ்ணகிரியில் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை!

* பிள்ளைப்பாக்கம் கண்ணாடிப் பொருள்கள் தொழிற்சாலை!

* மீண்டும் உற்பத்தியைத் தொடங்கிய போர்டு கார் தொழிற்சாலை!

எனப் பல தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன!

தொடர்ந்து பல தொழிற்சாலைகள் திறக்கப்படுகின்றன!

தமிழ்நாடு 2030 இல் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் என்பது திண்ணம்! திண்ணம்!

தமிழ்நாட்டின் தொழில் வரலாற்றில் ஒரே இடத்தில் பல தொழில்கள் தோன்றுவதற்கு வகை செய்யும் சிப்காட் நிறுவனத்தை 1971 இல் உருவாக்கி 1973இல் இராணிப்பேட்டையில் முதல் சிப்காட் தொழில் வளாகத்தை தொடங்கி தொடர்ந்து பல சிப்காட் வளாகங்களை உருவாக்கியர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

அதன்பின்னர், ஏறத்தாழ 50 ஆண்டுகளில் 2021 வரை 54 சிப்காட் தொழில் வளாகங்கள் தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு பகுதிகளிலும் ஏற்படுத்தப்பட்டன. இந்த சிப்காட் தொழில் வளாகங்கள் வாயிலாக புதிய புதிய தொழிற்சாலைகள் தோன்றி இலட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைப் பெற்றனர். தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் இந்தியாவின் ஒரு முன்னணி மாநிலமாக வளர்ந்தது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2021 இல் ஆட்சிப் பொறுப்பேற்றபின் தமிழ்நாட்டை 2030 க்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்திட இலக்கை நிர்ணயித்தார்கள்.

முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டின் தொழில்வளத்தைப் பெருக்கிட வேண்டும் என்பதில் குன்றா ஆர்வம் கொண்டு தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களிலும், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், அரபு நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் முதலிய வெளிநாடுகளிலும் அரசு முறைப் பயணங்கள் மேற்கொண்டு முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தி தமிழ்நாட்டில் உள்ள தொழில் வாய்ப்புகளையும், தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளையும் எடுத்துக்கூறி தமிழ்நாட்டிற்கு வந்து தொழில் தொடங்குமாறு வேண்டுகோள் விடுத்தார்கள்.

முதலமைச்சர் அவர்களின் இந்த வேண்டுகோளை ஏற்று தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட பல முதலீட்டாளர்கள் முன்வந்தனர். அந்த முதலீட்டாளர்களுக்கு நிலம் வழங்கிட ஐந்தாண்டுகளில் 30 புதிய தொழில் பூங்காக்களைத் தொடங்கினார்கள்.

அவை;

=> 2021 ஆம் முதல் ஆட்சியாண்டில்…

1. காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் மருத்துவக் கருவிகளை உற்பத்தி செய்திடும் சிப்காட் தொழில் பூங்கா

2. தேனி மாவட்டம் தேனியில் உணவுப் பூங்கா

=> 2022 ஆம் இரண்டாம் ஆட்சியாண்டில்…

3. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் எந்திரவியல் தொழில் பூங்கா.

4. திருவள்ளூர் மாவட்டம் மணலூரில் EMC சிப்காட் தொழிற்பூங்கா.

5. தூத்துக்குடி மாவட்டத்தில் அறைகலன்கள் பூங்கா.

6. பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் சிப்காட் தொழிற்பூங்கா.

=> 2023 திராவிட நாயகரின் மூன்றாம் ஆட்சி ஆண்டில்…

7. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் சிப்காட் வாகனத் தொழிற்பூங்கா

8. காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கத்தில் சிப்காட் தொழில் பூங்கா;

9. நெமிலியில் சிப்காட் தொழில் பூங்கா.

10. கோவை மாவட்டம் கூளநாயக்கன்பட்டியில் சிப்காட் தொழில் பூங்கா

11. வேலூர் மாவட்டம் தாரப்படவேடு கிராமத்தில் சிப்காட் தொழில் பூங்கா

12. தூத்துக்குடி மாவட்டம் வைப்பாறு சிப்காட் தொழில் பூங்கா.

=> 2024 திராவிட நாயகரின் 4 ஆம் ஆட்சி ஆண்டில்…

13. தூத்துக்குடி மாவட்டம் சில்ல நத்தம் சிப்காட் தொழில் பூங்கா.

14. கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏ.சாத்தனூர் SEZ சிப்காட் தொழில் பூங்கா.

15. பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் சிப்காட் தொழில் பூங்கா.

16. திருவள்ளூர் மாவட்டம் புதுவாயல் கிராமத்தில் சிப்காட் பூங்கா

17. இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் சிப்காட் பூங்கா.

18. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் காலணி பூங்கா.

19. கோவை மாவட்டம் வாரப்பட்டியில் சிப்காட் பூங்கா.

20. தருமபுரி மாவட்டம் அதகப்பாடி சிப்காட் பூங்கா.

21. விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரத்தில் சிப்காட் பூங்கா.

22. திருச்சி மாவட்டம் இலந்தைப்பட்டியில் சிப்காட் பூங்கா.

23. சிவகங்கை மாவட்டம் இலுப்பைக்குடியில் சிப்காட் பூங்கா.

=> 2025 திராவிட நாயகரின் 5 ஆம் ஆட்சி ஆண்டில்…

24. சேலம் மாவட்டத்தில் சேலம் ஜவுளி பூங்கா.

25. தூத்துக்குடி மாவட்டத்தில் அல்லிக்குளம் சிப்காட் பூங்கா.

26. திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் சிப்காட் பூங்கா;

27. சிவகங்கை மாவட்டம் கழனிவாசலில் சிப்காட் பூங்கா.

28. மதுரை மாவட்டம் வஞ்சி நகரத்தில் சிப்காட் பூங்கா.

29. திருப்பூர் மாவட்டம் கொளத்துப்பாளையத்தில் சிப்காட் பூங்கா.

30. இராமநாதபுரம் மாவட்டம் மாரியூர் கிராமத்தில் சிப்காட் பூங்கா

– என திராவிட மாடல் ஆட்சியில் 5 ஆண்டுகளில் மொத்தம் 30 சிப்காட் தொழில் பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

2021-க்குப்பின் ஏற்படுத்தப்பட்ட சிப்காட் தொழில் வளாகங்களில் உருவாக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகள் – முதலீடுகள் – வேலைவாய்ப்புகள்

1973 முதல் செயல்பட்டு வரும் சிப்காட் தொழில் பூங்காக்களில் நடைபெறும் தொழில்களை விரிவுபடுத்திடவும், புதிய தொழில் பூங்காக்களில் புத்தம் புதிய தொழிற்சாலைகள் பலவற்றை உருவாக்கிடவும் இதுவரை 5 ஆண்டுகளில் 816 புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த 816 தொழில் நிறுவனங்களுக்கும் மொத்தம் 7588.798 ஏக்கர் நிலங்களை சிப்காட் நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த 816 தொழிற்சாலைகளில் தூத்துக்குடி வின்பாஃஸ்ட் மின்வாகனத் தொழிற்சாலை, இராணிப்பேட்டையில் ஜாகுவார் லேண்டு ரோவர் கார் தொழிற்சாலை, ஜெயங்கொண்டத்தில் காலணி தொழிற்சாலை, கிருஷ்ணகிரியில் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை முதலான பல தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், பல தொழிற்சாலைகள் தொடர்ந்து திறக்கப்பட உள்ளன. இலட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்புகள் பெற்று வருகின்றனர். இவற்றின் காரணமாக தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவில் முன்னணி மாநிலமாகச் சிறந்து விளங்குகிறது.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்”

– என அய்யன் திருவள்ளுவர் கூறியதற்கு ஏற்ப, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தாம் எண்ணியபடி, தமிழ்நாடு 2030இல் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டுவார் என்பது திண்ணம்! திண்ணம்!

Tags : Tamil Nadu ,Chennai ,Chief Minister ,Mu. K. Stalin ,Chipcat ,Tuticorin Winfast Electric Vehicle Factory ,
× RELATED கூட்டணி ஒப்பந்தத்தை எல்லோரும்...