×

நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் லோக்ஆயுக்தா 2 மணி நேரம் விசாரணை


பெங்களூரு: முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதியிடமிருந்து கையகப்படுத்திய 3.16 ஏக்கர் நிலத்திற்காக, மைசூரு மாநகர வளர்ச்சிக் குழுமம் (மூடா) மாற்று நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரில், நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை லோக்ஆயுக்தா விசாரணை நடத்திவருகிறது. விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு முதல்வர் சித்தராமையாவுக்கு சம்மன் அனுப்பியிருந்த நிலையில், நேற்று லோக்ஆயுக்தா போலீஸ் முன் முதல்வர் சித்தராமையா விசாரணைக்கு ஆஜரானார்.

மைசூருவில் உள்ள லோக்ஆயுக்தா அலுவலகத்துக்கு நேற்று காலை 10.10 மணிக்கு சென்ற முதல்வர் சித்தராமையா 2 மணி நேர விசாரணைக்கு பிறகு மதியம் 12.10 மணிக்கு வெளியே வந்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, அனைத்தும் சட்டப்படி நடந்திருக்கிறது. பாஜவும் மஜதவும் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றன. லோக்ஆயுக்தா போலீஸ் என்னிடம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தேன். என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு உண்மையை கூறியிருக்கிறேன் என்றார்.

The post நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் லோக்ஆயுக்தா 2 மணி நேரம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Lokayukta ,Karnataka ,Chief Minister ,Chittaramaya ,Bangalore ,Mysore Municipal Development Group ,MUDA ,Sidharamaya ,Prawati ,Lokayuk ,Dinakaran ,
× RELATED டாக்டர் அம்பேத்கர்...