×

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

*கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு

கடலூர் : சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. கடலூர் அருகே 14 வயது சிறுமி 9ம் வகுப்பு படித்து வந்தார். அந்த சிறுமியை குறிஞ்சிப்பாடி விருப்பாச்சி பகுதி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த அப்பாஸ் (23). என்பவர் கடந்த 14.5.2020 அன்று ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்து சிறுமியின் பெற்றோர் நெய்வேலி அனைத்த மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்துகொண்டார்.

சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அப்பாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர் மீது கடலூர் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சாட்சிகள் விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் நீதிபதி லட்சுமி ரமேஷ் தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியை பலாத்காரம் செய்து தற்கொலைக்கு தூண்டிய அப்பாஸுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

The post சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை appeared first on Dinakaran.

Tags : Cuddalore Boxo Court ,Cuddalore ,Cuddalore Bocso Court ,
× RELATED கடலூர் கலெக்டர் அலுவலகத்தில்...